சமீபத்தில் வெளியான கர்ணன் படம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதோடு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வசூலில் தனுஷ் படத்தின் இதுவே உச்சம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட அதிரிபுதிரி ஹிட் படத்துக்கு பிறகு விக்ரமின் மகனை வைத்து கபடியை களமாகக் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளார் மாரிசெல்வராஜ்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது உறுதி செய்துள்ளார்.
“கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். PRE PRODUCTION பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்” என்று தனுஷ் கூறியுள்ளார்.