25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மலையகம்

கொட்டகலை இராணுவ முகாம் காணி வழக்கு தள்ளுபடி!

பொதுமக்கள் நிலங்களை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதாவும், பொது ஒழுங்கை சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டு இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

அப்போது 58 பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மற்றும் பிரிகேடியர் தனோஜ் ரஷ்மித குடவிதான ஆகியோரை பிரதிவாதிளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்த காணியிலிருந்து வெளியேற கோரப்பட்டிருந்தது.

நேற்று (22) வடக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீ விபத்து போன்ற இயற்கை பேரழிவுகளில் உடனடியாக செயற்படவும், கோவிட் -19 நிலைமையைக் கட்டுப்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நிறுவுவதற்கும் ஹட்டன் கொட்டகலை பகுதியில் 581 படைப்பிரிவை நிறுவ, பொருத்தமான நிலத்தை மாவட்ட செயலகத்திடம் இராணுவம் கோரியிருந்தது.

அதன்படி, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கொட்டகலை பகுதியில் சுமார் 05 ஏக்கர் நிலத்தை நுவரெலிய மாவட்ட செயலகம் 25.06.2020 அன்று இராணுவத்திடம் எழுத்துப்பூர்வமாக ஒப்படைத்தது.

எனினும், அந்த காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம்  நீண்டகால குத்தகைக்கு பெற்றிருந்ததாக குறிப்பிட்டு, நபரொருவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த நிலத்தை கையளிப்பதால் அமைதி மீறல் ஏற்படுமென வழக்காளிகள் நிரூபிக்கவில்லையென குறிப்பிட்டு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment