சங்கீத கதிரை போட்டியில் கலந்து கொண்டவருக்கு கொரோனா: இதுவரை 38 பேருக்கு தொற்று!

Date:

திவுலபிட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 91 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுளின் முதல் தொடர்பாளர்களிற்கு மூன்று நாட்களுக்குள் தொற்று அறிகுறிகள் தென்பட்டதாகவும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியில் உள்ள அஸ்வன்னவத்த கிராமத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 38 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் இ.போ.ச டிப்போவில் பணிபுரிந்த ஒருவர் 13ஆம் திகதி பிசிஆர் சோதனைக்கு உள்ளாகி, அன்றைய தினமே வீடு திரும்பியுள்ளார். அவர் 15ஆம் திகதி நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.

அவர் சங்கீத கதிரை போட்டியிலும் பங்கேற்றார்.

அவரது பி.சி.ஆர் சோதனை அறிக்கையின் முடிவுகள் ஏப்ரல் 16 அன்று வெளியாகின. அதில், அவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, அவர் பங்கேற்ற புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட 38 பேர் இதுவரை தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்