நயன்தாராவுக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் விக்னேஷ் சிவன் பக்கம் திரும்பி விட்டார்கள். இப்பவே ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் என்கிறார்கள்.
நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோதில் இருந்தே நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் நயன்தாரா ரசிகர்களின் ஆசையே.
விக்னேஷ் சிவன் அவ்வப்போது நயன்தாராவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். அதை பார்த்து சந்தோஷப்பட்டாலும், தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று தான் ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபுதேவாவால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய யோசிக்கும் நயன்தாரா?
இந்நிலையில் பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு எடுத்து அவசரப்பட்டது போன்று தற்போது நடந்துவிடக் கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திருமதி ஆகிவிட்டால் கெரியர் அடிவாங்கிவிடும் என்று நயன்தாராவுக்கு கவலையாம்.
கெரியரின் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பிரபுதேவா விஷயத்தால் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வர நயன்தாரா தயாராக இல்லை என்பதை அறிந்த ரசிகர்களோ, விக்னேஷ் சிவன் உங்களுக்காவது தலைவியை திருமதியாக்கிப் பார்க்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.
உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்குமா, நடக்காதா, எங்களுக்கு இப்பவே அந்த உண்மை தெரிந்தாக வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் ஏற்கனவே பதில் அளித்துவிட்டார். அதாவது காதல் போர் அடிக்கும்போது தான் திருமணம் என்று விக்னேஷ் சிவன் கூறிவிட்டார். இருப்பினும் ரசிகர்கள் அவரை சும்மாவிடுவதாக இல்லை.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது அவரவர் கெரியரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நானும் ரௌடி தான் படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.