வளைகுடா கடற்பரப்பில் இருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலின் ட்ரோன் காட்சிகளையும், தனது “தற்கொலை ட்ரோன் சோதனை விமானத்தின்” காட்சிகளையும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ளது.
ஈரான் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், வளைகுடா கடற்பரப்பில் உள்ள விமானம் தாங்கி கப்பலின் துல்லியமான காட்சிகளை வெளியிட்டுள்ளது.
அத்துடன், தனது “தற்கொலை ட்ரோன்கள்“ பற்றிய முதலாவது வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது.
இலக்குகள் மீது ஆளில்லாத ட்ரோன்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகளை ஈரானிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ளது.
Iran's IRGC drone takes precise footage as it flies over US aircraft carrier in the Persian Gulf pic.twitter.com/q0xEfoty7v
— Press TV (@PressTV) April 21, 2021
மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் தனது இராணுவ வலிமையை புலப்படுத்துவதற்காக இந்த காட்சிகளை வெளியிட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
UPDATE
Iran’s IRGC also released footage of its suicide drone test flight pic.twitter.com/t4PCUpFthz— Press TV (@PressTV) April 21, 2021