உலகம்

பாகிஸ்தானிற்கான சீன தூதர் தங்கியிருந்த ஹொட்டலில் குண்டுத்தாக்குதல்!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் சீன தூதர் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டலில் நடந்த குண்டுத்தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஹொட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹொட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் நடைபெற்ற இந்த வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

சீன தூதர் உள்பட சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் இந்த ஹொட்டலில் தான் தங்கியிருந்துள்ளனர். எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் குறிப்பிட்ட ஹொட்டலில் இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் எனவும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறை: கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த அறிவுறுத்து!

Pagetamil

கொலம்பியா இராணுவ தளத்தில் கார் குண்டு தாக்குதல் !

divya divya

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேர் பாதிப்பு: 390 பேர் பலி!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!