26.9 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

மேலும் 5 கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று (20) அறிவிக்கப்பட்ட மரணங்களுடன், நாட்டின் மொத்த கொரோணா மரணங்களின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காண்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு நிலை மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காண்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் ஏப்ரல் 17ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர சிறுநீரக சிதைவடைவு, சுவாசிப்பதில் சிக்கல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காண்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முனதினம் (19) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை, நீரிழிவு, குருதியில் உயர் இலிப்பிட்டு மட்டம் உயர்வடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதான ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (19) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், இரண்டாம் நிலை பக்டீரியா தொற்றுடன் சிக்கலான கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் ஏப்ரல் 17ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி இறக்குமதி அனுமதிக்காலம் நாளையுடன் நிறைவு

east tamil

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

east tamil

4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை: 51ஆவது ஆண்டு நினைவு நாளை

east tamil

மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

east tamil

பஸ்களில் தேவையற்ற உபகரணங்களை அகற்ற 03 மாத கால அவகாசம்

east tamil

Leave a Comment