கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் அதிக எண்ணிக்கையிலான COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 94 தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் நேற்று 367 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் 54 பேரும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 43 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 41 பேரும், கண்டி மாவட்டத்தில் 22 பேரும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய 22 நபர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 21 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 13 பேரும், பதுளை மாவட்டத்தில் 11 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பேரும், இரத்னபுரி மாவட்டத்தில் 7 பேரும், கேகாலை மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 5 பேரும், அம்பாறை மற்றும் மாத்தறை மாவட்டத்தில் தலைத 4 பேரும், திருகோணமலை மற்றும் நுவரெலியாவிலிருந்து தலா 3 பேரும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டவிலிருந்து தலா 2 பேரும், மாத்தளை மற்றும் மட்டக்களப்பிலிருந்து தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




