கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வதற்கு சீன தூதரகம் ஏற்பாடு செய்தமை குறித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை 22ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கள விஜயமாக அழைத்து செல்ல, கொழும்பிலுள்ள சீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற அலுவலகத்தினால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று மீளவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இன்று நாடாளுமன்றத்தில் இதனை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பு துறைமுக நகரத்திற்கு அழைத்து செல்ல சீன தூதரகத்திற்கு என்ன உரித்துள்ளதென கேள்வியெழுப்பினார்.