புகைப்படக் கலைஞர் ஒருவர், துபாய் பாலைவனத்தின் நடுவே இருக்கும் பிறை நிலா வடிவிலான ஏரி ஒன்றை, புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாக பரவி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் நவீன காலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கு பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள், இங்கு சுற்றுலா வருகின்றனர். மேலும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு என்பதால், உலக மக்கள் இங்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.
துபாயில் உள்ள அல் குத்ரா பாலைவனத்தில், பிறை நிலா வடிவ ஏரி அமைந்திருக்கிறது. ஏரியைப் பார்வையிட, மணல் வழியாக வாகனத்தில் பயணிக்க வேண்டும். ராஸ் அல் கைமாவின் பிங்க் ஏரிக்கு அடுத்தபடியாக இது மிகவும் பிரபலமான இடமாக உள்ளது. இந்நிலையில், துபாயை சேர்ந்த முஸ்தபா என்ற புகைப்படக் கலைஞர், பிறை வடிவ ஏரியை புகைப்படமாக எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
துபாய் பாலைவனத்தின் நடுவில் நான் பிறை வடிவ நிலவை கண்டுபிடித்திருக்கிறேன். மறைந்துள்ள இந்த அரிய பொக்கிஷத்தை, அரிதாகவே மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். சூரிய உதயமும், அஸ்தமனமும் இங்கு மிக பிரமாதமாக இருக்கிறது’ என பதிவிட்டு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 7 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை அவரது இந்த பதிவு குவித்திருக்கிறது. சூப்பரா இருக்குதுல..!