29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் முதல் அலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். 2வது அலையிலும் பலரும் இலக்காகி வருகின்றனர்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சியிலும் ரண்தீப் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என பல தலைவர்கள் பாதி்க்கப்பட்டனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘லேசான அறிகுறியை உணர்ந்ததால் கோவிட் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள்’’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’ – உச்ச நீதிமன்றம்

Pagetamil

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!