அமெரிக்காவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மதுபானம் பற்றி எரிந்த சம்பவத்தில், இளம் யுவதியொருவர் முகம் பொசுங்கியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி மரிசா டானியல் என்பவர், தன் தோழிகளுடன் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அனைத்து பெண்களும் சுற்றுலாவின் கடைசி நாளை விருந்து வைத்து கொண்டாட முடிவு செய்தனர்.
அதனையடுத்து மதுபான விடுதிக்கு சென்று மது அருந்தும்போது, ஒரு பெண் தீப்பற்றி எரியும் மதுபானம் ஒன்றை அருந்த விரும்பியுள்ளார்.
விடுதி ஊழியர், அந்த பெண்ணுக்கு ஒரு தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட மதுபானத்தில் தீவைத்தார். இதன்போது, அந்த ஊழியர் மதுபானத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஊற்ற முயன்றுள்ளார். அப்போது அந்த மதுபான போத்தலின் மூடி கழன்று, எதிர்பாராத விதமாக மதுபானம் அதிகமாக கொட்டியது. அந்த நேரத்தில், தனது தோழியின் தொடையில் சிறிது மதுபானம் சிந்தி தீப்பிடித்ததை அவதானித்த மாரிசா, அணைக்க முயன்றபோது, அவர் மீது தீப்பற்றியது.
அதில், மாரிசாவின் முகம், இடது காது மற்றும் இடது கை போன்றவை பொசுங்கிப் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாரிசாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுபான விடுதி மீது இழப்பீடு கோரி மாரிசா வழக்கு தொடரவுள்ளார்.