கொரோனா. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அன்று வுஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அதன் தாக்கம் உலகம் முழுக்க இருந்தது. பொருளாதாரமும் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் முடங்கியிருந்தன எல்லாம் சரியாகி மீண்டும் பொறுமையாக படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிய போது தற்போது இரண்டாவது அலை வீசுகிறது. இது முன்னை காட்டிலும் கோரமானது. இந்த முறை இளவயதினரையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக 25 முதல் 40 வயதுக்குட்பட்டவரை அதிகமாக தாக்க தொடங்கி உள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி தற்போது கொரோனா அறிகுறிகளும் மாறியுள்ளது. அசாதாரண அறிகுறிகளை கொண்டிருக்கும் இந்த நிலை முதல் அலை கொரோனாவில் இல்லை என்பதால் இதை எதிர்கொள்வது சிரமாமாக உள்ளது. அப்படி மருத்துவர்கள் சொல்லகூடிய இந்த அறிகுறிகளை எப்போதும் அலட்சியம் செய்ய வேண்டாம். என்ன மாதிரியான அறிகுறிகள் என்பதை பார்க்கலாம்.
உலர்ந்த வாய்
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறியாக இதை சொல்லும் போது வாய்வழி அறிகுறியாகவும் இதுவும் சொல்லப்படுகிறது. உலர்ந்த வாய் பெரும்பாலும் வைரஸ் தொற்றுநோய்களுக்கு பொதுவானது.
உலர்ந்த வாயில் உமிழ்நீர் உற்பத்தியை சீர்குலைத்து SARS-COV-2 உள்ளிட்ட நோய்க்கிருமிகளின் பரவலை மேலும் எளிதாக்குகிறது. இந்த ஆரம்ப அறிகுறி எப்படி கொரோனாவை தூண்டும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்றாலும் வாயில் இருக்கும் தசை வாய்வழி திசுக்களை வைரஸ் தாக்கும் போது உலர்ந்த வாய் நோய்க்குறி அல்லது ஜெரோஸ்டோமியா ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள் இது இருமல் போன்ற பிற அறிகுறிகளுக்கும் முன்பே இது தாக்க கூடும்.
கூடுதலாக இந்த ஜெரோஸ்டோமியா வாயில் வறட்சி அல்லது ஒட்டு தன்மையை உணர்த்தும். இது உமிழ்நீரை தடிமனாக்குகிறது. இதனால் நீங்கள் துர்நாற்றத்தையும் அனுபவிக்க முடியும்.
இரைப்பை பிரச்சனை
இருமல் அல்லத் காய்ச்சல் இல்லாத நிலையில் இரைப்பை குடல் பிரச்சனைகள் கொரோனாவுக்கு சாதகமாக உள்ளது. இது கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களில் காணப்படும் பொதுவான அறிகுறியாகும்.
இரைப்பை குடல் தொற்று அறிகுறிகள் கொரோனா அறிகுறிகளுடன் கடுமையான அறிகுறியாக இருந்தாலும் பல நேரங்களில் குடலில் மட்டுமே கொரோனா அறிகுறிகள் தோன்றூகிறது. இது வயிறு மற்றும் மன உளைச்சலை அதிகமாக்குகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் குடல் தொடர்புகொண்டு பல பணிகளை செய்யலாம்.
குடல் நுண்ணுயிரி வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து செயல்படுகின்றன. அதோடு நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றன குடல் நுண்ணுயிரியிலுள்ள இடையூறு உங்கள் ஆரோக்கியத்துக்கு பாதிப்புகளை உண்டாகலாம்.
அசாதாரண வயிற்று பிடிப்புகள், தொடர்ச்சியான வலி, செரிமானத்தில் சிரமம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கொரோனா சோதனையை செய்யகூடிய ஆரம்ப அறிகுறீயாக இருக்கலாம்.
குமட்டல்
தற்போதைய ஆராய்ச்சியின் படி கொரோனா நோயாளிகள் 53% பேர் தங்கள் நோயில் குறைந்தது ஒரு இரைப்பை குடல் அறிகுறியை கொண்டிருக்கிறார்கள். குமட்டல், வாந்தியெடுத்தல் போன்றவை இளவயது கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பதிவு செய்யப்படுகின்றன.
குமட்டல், இரைப்பை குடல் நோய்த்தொற்றின் மூலம் நாள்பட்டதாக ஏற்படலாம். சமயங்களில் அது தானாகவே சரியாகவும் செய்யலாம். இது குழந்தைகள் மற்றூம் பெரியவர்களில் ஏற்படும் நோயின் அசாதாரண அறிகுறி அல்ல என்றாலும் விரைவான வைரஸ் பரவல், முறையான வீக்கம், சிகிச்சை மருத்துகளின் பக்கவிளைவுகள் குமட்டலை உண்டாக்கலாம்.
கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளாகும் போது நோயாளிகள் இரத்த வாந்தி எடுக்கலாம். இதற்கு கடுமையான மருத்துவ கவனிப்பு தேவை.
வயிற்றுப்போக்கு மற்றும் தளர்வான மலம்
கொரோனா உடன் வயிற்றூப்போக்கு , தளர்வான மலம் மற்றும் மல முரண்பாடு போன்ற வடிவத்திலும் காட்டப்படலாம். இது எல்லோருக்கும் நடக்காது. ஆனால் காய்ச்சல் அல்லது உடல் வலி போன்ற வேறு எந்த பொதுவான அறிகுறிகளுக்
கும் முன்பாக அதிக பேர் இந்த அறிகுறிகளுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தற்போது எச்சரித்து உள்ளார்கள்.
வைரஸ் பரவுவதற்கான பாதையாக மலம் பரவுவதும் குறிப்பாக இந்த நான்கு மாதங்களில் இதற்கான அதாரமும் உள்ளது. அதனால் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு இருந்தால் அது கொரொனாவாக சந்தேகம் கொண்டு தனிமைப்படுத்தி கொள்வதன் முலம் தொற்று அபாயத்தை குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிவப்பு கண்கள்
கொரோனா நோயாளிகளுக்கு வெண்படல அழற்சி இருக்கலாம் என்று பல ஆய்வுகள் சுட்டிகாட்டுகிறது. வைரஸ் கண்களை ஈரமாக வீக்கமாக வைத்திருக்கலாம். அடிக்கடி கண்களில் அரிப்பை உண்டாக்கலாம்.
வைரஸ் கண்ணில் ஒரு முக்கியமான திசுக்களை பாதிக்கும் போது அத் கன் ஜக்டிவா என்று அழைக்கப்படுகிறது. பல மருத்துவர்கள் இளஞ்சிவப்பு கண் அல்லது கண்கள் சிவத்தல் பார்வையை எரிச்சலூட்டக்கூடியது. இது கொரோனா வைரஸின் மிக முக்கியமான அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் கண்களுக்கு சரியான நேரத்தில் கவனம் செலுத்தப்படும் போது முன்கூட்டியே சிகிச்சை பெற உதவுகிறது.
கொரோனா பாதிக்கப்பட்ட சிவப்பு கண்களில் சாதாரண வெண்படலத்தை போலன்றி ஒரு கண்ணையும் பாதிக்கும். மூச்ச்த்திணறல் நிலையான கண் எரிச்சல், ஒளியின் உணர்திறன் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.
தலைவலி
தலைவலி, உடல்வலி மற்றூம் தசைவலி போன்றவை நோய்த்தொற்றின் மிகவும் கடினமான அறிகுறிகளாக இருக்கலாம். உடல் வெப்பத்தை பதிவு செய்யாமல் இருப்பதால் இது போன்ற அறிகுறிகள் முன்பே காண்பிக்கப்படலாம்.
கொரோனா காராணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களும் தொடர்ந்து தலைவலி அறிகுறியை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் வரும் தலைவலி வழக்கமான கடினமான தலைவலிகளிலிருந்து வேறுபட்டதாக சொல்லப்படுகிறது.
சோர்வு
ஏராளமான கொரோனா நோயாளிகள் தொற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக பலவினமான சோர்வு குறித்து சொல்கிறார்கள். இருமல், தொண்டைபுண் தவிர ஏராளமான கொரோனா நோயாளிகள் பலவீனமான நிலையை எதிர்கொண்டதாக இங்கிலாந்து நிபுணர்கள் கவனித்திருக்கிறார்கள்.
வைரஸ் தொற்று உண்டாகும் போது சோர்வு என்பது பொதுவான அறிகுறியாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு இருக்கும் போது அதை சமாளிப்பது மிகவும் கடினமானது.
இந்த அறிகுறிகளில் ஒன்று தொடர்ந்து இருந்தாலும் பல அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். தொற்று பரவாமல் தடுத்திடுங்கள்.