27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
உலகம்

இந்தியாவுக்கு பயணிப்பதைத் தவிருங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்..

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு பயணிப்பதை நாட்டு மக்கள் தவிர்க்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ”தற்போதுள்ள சூழலில் நீங்கள் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள தற்போதைய சூழல் ஆபத்தானது. எனவே, இந்தியாவுக்குப் பயணிப்பதைத் தவிருங்கள். எனினும் நீங்கள் இந்தியாவுக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று எண்ணினால் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட பிறகு செல்லுங்கள்.

அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மற்றவரிடமிருந்து 6 அடி தூரத்தில் தள்ளி நின்று பழகுங்கள். கூட்டத்தைத் தவிருங்கள். இந்தியா சென்று வந்த பின்னர் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவீர்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவுக்கு தினசரி 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

இந்தியாவில் மே மாதம் 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மோடி தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது.உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

Pagetamil

உக்ரைன் போரை நிறுத்த சிறப்பு தூதரை நியமித்த ட்ரம்ப்

Pagetamil

Leave a Comment