26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

மஹிந்தவின் கூட்டத்திற்கு போகாத 10 பங்காளிகள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

தேசிய சுதந்தர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய, எங்கள் மக்கள் கட்சி, ஜனநாயக இடது முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜாதிக காங்கிரஸ், லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை மகாஜன கட்சி மற்றும் ஜாதிக ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்திற்கு முன்னர், அமைச்சர்கள் வாசுதேவ, வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, தங்கள் கட்சிகளின் பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்க முடியாததால் வேறு திகதியை ஒதுக்கித் தருமாறு கேட்டனர். அவர்களுக்கு இன்னொரு திகதி தருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கட்சி சாராத தலைவர்கள் குழுவை கூட்டத்திற்கு அழைத்ததால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 51 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். பொதுஜன பெரமுனவுடன் 14 அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகத் தொழிலாளர் தின நிகழ்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுகாதார வழிகாட்டுதல்களின்படி மே தின பேரணிகளை நடத்துவதில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

பொதுஜன பெரமுன கொழும்பு மாநகரசபை மைதானத்தில் மே தின பேரணியை நடத்தும், இலங்கை சுதந்திரக் கட்சி மே தின பேரணியை பொரளை கம்ப்பெல் மைதானத்தில் நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுதந்திரக் கட்சி முன்னதாக பொலன்னறுவையில் மே தின பேரணியை நடத்த முடிவு செய்திருந்தது.

பிரதமர் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த மூன்று அமைச்சர்கள் நேற்று (19) காலை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment