யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வடமாகாணத்தில் 350 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் யாழ்மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில், 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிசார்.
ஏற்கனவே 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ள நிலையில், இன்று மேலும் 6 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.




