மிரட்டலை மீறி அன்னைக்கு அஞ்சலி!

Date:

அன்னைபூபதியின் 33வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அன்னைபூபதியின் நினைவு தமிழ்தேசியகூட்டமைப்பினால் வழமைபோன்று இன்று (19) திங்கள் கிழமை காலை 6, 15, மணியளவில் மட்டக்களப்பு நாவலடி அன்னைபூபதி நினைவு வளாகத்தில் உள்ள கல்லறையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு 33,சுமர்களை ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

கூட்டமைப்பினரின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து, தற்போது அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அன்னைபூபதி அவர்கள் கடந்த 1988,ம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலயத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த வேளையில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து முப்பது தினங்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்