24.8 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 357 பேருக்கு தொற்று!

நேற்று 357 COVID-19 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 96,796 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய அடையாளம் காணப்பட்டவர்களில் 281 பேர் மினுவாங்கொட-பேலியகொ COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொ COVID-19 கொத்தணி 91,343 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 70 நபர்களும் நேற்று COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது, 3,065 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, 281 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,113 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 411 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

நேற்று ஒரு கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டது. பிட்டபெத்தரவை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் இறைவனடி சேர்ந்தார்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – வழி நடத்தியவர் வெளிநாட்டில்!

east tamil

உள்ளுராட்சி தேர்தலில் முன்னைய வேட்பாளர்களுக்கு தமிழரசுக் கட்சி முன்னுரிமை

east tamil

Leave a Comment