31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

துறைமுக நகர சட்டமூலம்: நாளை வரை விசாரணைகள் ஒத்திவைப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் நாளை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மனுக்கள் காலை 10 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான நீதிபதிகள் குடாழில், நீதிபதிகள் புவனேக அலுவிஹார, பிரியந்த ஜெயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்றுக்கொள்கைகளிற்கான மத்திய நிலையம், ட்ரான்ஸ்பரன்ஷி இன்ரநஷனல், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி மற்றும் பல தரப்புக்களால் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த சட்டவரைபு  மூலம் ஒரு ஆணைக்குழுவை நிறுவுவது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறது. அதன்படி, துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொதுஜன பெரமுன அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பெரமுன சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment