இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா பாதித்தவர்களில் ஒருவர் வெளி நாட்டிருந்து வந்தவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையினால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக 20 க்கும் குறைவாகவே கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கரோனாவுக்கு14 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது எனத் தெளிவான தகவல் இல்லை.
சீனாவுக்கு சென்று ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவவில்லை என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.