கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் பாலூட்டும் தாய்மார்களிற்காக பிரத்தியே பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நீதிமன்ற வளாகங்களில் பாலூட்டும் தாய்மார் எதிர்கொள்ளும் சிரமத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், கடந்த மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஹிருணிகா சரியான தருணத்தில் முன்னிலையாகவில்லை. ஓரிரு நிமிடங்கள் தாமதித்து விட்டார். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை பகிரங்கமாக குறிப்பிட்டு, பாலூட்டும் தாய்மாரிற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமென நீதியமைச்சரிற்கு அழைப்பு விடுத்தார்.
ஹிருணிகாவை பாராட்டிய நீதியமைச்சர், நீதிமன்ற வளாகத்தில் பாலூட்டும் தாய்மாரிற்குரிய வசதியை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1