வனிதா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா!!!

Date:

வனிதா விஜயகுமார் எம்மதமும் சம்மதமே என்பது போன்று போட்ட ட்வீட்டை பார்த்தவர்கள் அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாக பேசத் துவங்கிவிட்டனர். மற்றபடி வனிதா மதம் மாறவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். தியாகராஜன் தன் மகன் பிரசாந்தை வைத்து இயக்கி வரும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார் வனிதா.
முன்னதாக அவர் கேரவனில் மேக்கப் போட்டபோது அதை தன் யூடியூப் சேனலில் லைவாக காட்டி லைக்ஸுகளை அள்ளினார். இந்நிலையில் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஹரிதா என்பவர் ஒரு ஓவியம் வரைந்து வனிதாவுக்கு அன்பு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து வனிதா ட்விட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த ட்வீட்டில் அவர் இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ஒரு வார்தையை பார்த்துவிட்டு என்ன வனிதாக்கா இஸ்லாத்திற்கு மாறிவிட்டீர்களா என்று சமூக வலைதளவாசி ஒருவர் கேட்டார்.

தன் ஆதரவாளர்கள் என்ன கேட்டாலும் பதில் அளிக்கும் வனிதா அந்த நபருக்கும் பதில் அளித்தார். நான் ஒரேயொரு சக்தியை தான் நம்புகிறேன் என்றார் வனிதா.

வனிதாவின் ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,

இன்ஷா அல்லாஹ் என்று ஒரு வார்த்தை போட்டதற்காக வனிதாவை இப்படி கேட்பது நியாயம் இல்லை. வனிதாக்காவின் பதில் அருமை. அது தான் வனிதாக்கா. அனைத்து மதமும் ஒன்று தான் என தெரிவித்துள்ளனர்.

வனிதா அந்தகன் தவிர்த்து ஹரி நாடாருடன் சேர்ந்து 2கே அழகானது காதல் படத்தில் நடிக்கிறார். மேலும் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்திலும் வனிதா நடிக்கிறார். இது தவிர்த்து ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வரும் என்று வனிதா தெரிவித்தார். ஆனால் இதுவரை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. அதனால் எப்பொழுது அந்த போஸ்டர் வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்