30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

பள்ளிவாயல்களில் கொரோனா பரவுகின்றது என்ற மாயையை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படுகின்றதா?: இம்ரான் எம்.பி கேள்வி

பஸ் வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலானோர் 18 வயதுக்கு குறைந்தவர்களாகும். இவ்வாறிருக்க பள்ளிவாயல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் செல்ல முடியும் என்ற வரையறை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன் என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.

நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சுற்றறிக்கை இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட சமய ரீதியான அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? பள்ளிவாயல்களினால் தான் கொரோனா பரவுகின்றது என்ற  ஒரு மாயையை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சி எடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இது முஸ்லிம் சமுகம் பற்றிய மோசமான ஒரு மனப்பதிவை ஏனையோருக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

இது குறித்து 20 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஒருங்கிணைப்புத் தலைவர் பதவி, ஒருசில வேலைவாய்ப்புகள், வேறு சில தனிப்பட்ட நன்மைகள் என்பவற்றுக்காக தொடர்ந்து முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப்போகின்றீர்களா? அல்லது முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போகின்றீர்களா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளதால் இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பான விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment