நேற்று 253 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 96,439 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 200 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சிறைகளில் இருந்து நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 91,056 ஆக அதிகரித்தது.
அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்த 49 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, 2,852 பேர் தற்போது பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, 221 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,832 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 370 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1