பிரபல நடிகை ரைசா வில்சன் தவறான மேக்கப்பினால் முகம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக நடித்து வருபவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் பெரிய அளவு பெயரைப் பெற்ற ரைசா வில்சன் அதற்கடுத்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படி நடிக்கவில்லை. நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.
சோஷல் மீடியாக்களில் கவர்ச்சி விருந்து வைப்பதை மட்டுமே இப்பொழுது தொழிலாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்கிராம் பக்கத்தில் முகம் பொசுங்கிப் போன புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.
ரைசா வில்சன் பேசியல் செய்வதற்காக பைரவி என்ற பியூட்டிசனை பார்க்க சென்று உள்ளார். அப்பொழுது வலுக்கட்டாய மாக ஒரு டிரிட்மெண்ட் கொடுத்துள்ளனர். இதனால் முகம் வீக்கம் ஏற்பட்டு அலங்கோலமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
இது போன்று இனி யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.




