27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

இந்தியாவில் இதுவரையில்லாமல் தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தைக் கடந்தது; 1501 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 16 ஆயிரத்து 500 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,501 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு, ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 419 பேர், டெல்லியில் 167 பேர், சத்தீஸ்கரில் 158, உத்தரப்பிரதேசத்தில்120, குஜராத்தில் 97 பேர், கர்நாடகாவில் 80, மத்தியப்பிரதேசத்தில் 66 பேர், பஞ்சாப்பில் 62 பேர், தமிழகத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ராஜஸ்தானில் 37 பேர், உத்தரகாண்ட் பிஹார், மே.வங்கத்தில் தலா 34 பேர், ஹரியானாவில் 32 பேர், ஜார்க்கண்டில் 30 பேர், கேரளாவில் 27 பேர், தெலங்கானா, ஆந்திராவில் தலா 15 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 12பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து 39 நாளாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து அதன் சதவீதம் 12.18 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 1 கோடியே 28 லட்சத்து 9ஆயிரத்து 643 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 86.62 ஆகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையில், இதுவரை 26 கோடியே 65 லட்சத்து 38 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும்15லட்சத்து 66 ஆயிரத்து 394பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment