25.9 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

நம் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதை கண்டுபிடிப்பது எப்படி?… குறிப்பாக பெண்களுக்கு…

இந்த கட்டுரையின் மூலம் ஈஸ்ட்ரோஜன் முக்கியத்துவம்விவரிக்கப்படுகிறது. அது சரிவர இயங்குவதில் ஏற்படும் தடுமாற்றங்களின் காரணமாக ஏற்படும் பகுதிப்புகளின் அறிகுறிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உடல் வலி, தூக்கமின்மை போன்றவை அறிகுறிகளாக உள்ளன.

பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் சரியான அளவு கொண்ட ஈஸ்ட்ரோஜன் உடலில் இருக்க வேண்டும். ஆனால், இந்த அளவில் ஏதேனும் தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக நீங்கள் கவனம் செழுத்த வேண்டும். இந்த கட்டுரையில் வழிகாட்டப்படும் அறிகுறிகளைக் கவனிப்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
​ஈஸ்ட்ரோஜன்

ஒவ்வொரு பெண்ணும் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்ற வார்த்தையைக் தெரிந்து வைத்திருப்பீர்கள்! நல்லது, நிச்சயமாக, இது பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும் மிக முக்கியமான ஹார்மோன் ஆகும். சில நேரங்களில், அதன் அளவு மாறுபட்டால் உடலில் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் சரியான அளவில் இல்லை என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகளைக் கவனிக்கவும்!

​உடல், மன ஆரோக்கியம்

முதலில், நம் உடலுக்கு ஈஸ்ட்ரோஜனின் பங்கைப் புரிந்து கொண்டால் இந்த கட்டுரை முக்கியத்துவம் புரியும். பெண்கள் பருவமடையும் போது ஏற்படும் அனைத்து உடல் மாற்றங்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் காரணமாகும். பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சி, அந்தரங்க உறுப்பில் முடி, அடிவயிற்று முடி அனைத்தும் இந்த ஹார்மோன் காரணமாக நடக்கும். மேலும், குழந்தை வளர்ப்பில் ஈஸ்ட்ரோஜனுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, எலும்புகளைப் பாதுகாத்தல், உங்கள் மனநிலையைப் பராமரித்தல் மற்றும் பலவற்றிற்கு உறுதுணையாக இருக்கிறது.

​அடையாளம் காண்பது

இந்த ஹார்மோனில் ஏதேனும் தவறு இருக்கும்போது, முதல் அறிகுறியை மாதவிடாய் சுழற்சியில் காணலாம். இந்த பிரச்சனை பெரிதானால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே தான் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உற்பத்தி ஆனாலோ அல்லது மிகக் குறைவாக உற்பத்தி ஆனாலோ அதனால் ஏற்படும் சிக்கலை உடனடியாக அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்.

இது மிகவும் எளிது. பெண்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் உடலில் ஏதாவது மாற்றம் நடக்கிறதா என்று கவனிக்கவும்.

உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவு சமநிலையில் இல்லை என்பதைக் இந்த எட்டு அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

  • ​திடீர் உடல் எடை அதிகரிப்பு

உங்கள் எடையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டால், அது ஒரு ஈஸ்ட்ரோஜன் மாறுபாட்டு அடையாளமாக இருக்கலாம். பெரும்பாலும், இது எடை அதிகரிக்க செய்யும், ஆனால், சிலருக்கு உடல் எடை இழப்பு நிகழ்வுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஈஸ்ட்ரோஜன் மாறுபாட்டால் உங்கள் உடலானது கொழுப்பைச் சேமிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக பெண்களில் பெரும்பாலோர் எடை அதிகரிப்பை அனுபவிக்கிறீர்கள்.

  • ​தோல் மற்றும் கூந்தலில் மாற்றம்

ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு உங்கள் தோல் மற்றும் முடியையும் பாதிக்கிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் திடீர் முடி உதிர்தல், வழுக்கை மற்றும் பிரேக்அவுட்கள் ஆகியவை பெரும்பாலான மக்கள் அனுபவிக்கின்றனர். உண்மையில், சில பெண்களில் முடிகளின் வளர்ச்சியும் காணப்படுகிறது. உடலில் இந்த ஹார்மோனின் அதிகப்படியான அளவு உயர்வதன் காரணமாக இது நிகழ்கிறது.

  • ​தொடர்ச்சியான தலைவலி

ஈஸ்ட்ரோஜனுக்கு உங்கள் மூளைக்கு நிறைய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் ஹார்மோன் அளவுகளில் திடீர் உயர்வு அல்லது வீழ்ச்சி அதிக ஒற்றைத் தலைவலி தாக்குதல்களை ஏற்படுத்துகிறது, மேலும் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்குகிறது.

  • ​சோர்வு

ஹார்மோன் உடலை கொழுப்பைச் சேமிக்க சிக்னல் கொடுப்பதன் காரணமாக ஆற்றல் வெளியிட்டு நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பதிலாக நீங்கள் எப்போதும் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்வீர்கள். உணவைச் சாப்பிட்ட பிறகும், நீங்கள் சோர்வாக தான் இருப்பீர்கள்.

  • தூங்குவதில் சிக்கல்கள்

புரோஜெஸ்ட்டிரோன் என்ற மற்றொரு ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன் தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும்போது, இது புரோஜெஸ்ட்டிரோனின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது, இதன் காரணமாக நீங்கள் தூக்கமின்மை போன்ற தூக்க சிக்கல்கள் ஏற்படும்

  • ​மலச்சிக்கல்

ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு உங்கள் குடலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அடிப்படையில், இது செரிமான பிரச்சனையை அதிகரித்து மலசிக்கல் போன்றவற்றினை உருவாக்குகிறது.

  • ​குறைந்த செக்ஸ் உணர்வு:

ஈஸ்ட்ரோஜன் உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். நம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் மிகக் குறைந்த அளவு உள்ளது தெரியுமா? ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும்போது, அது அவற்றின் அளவையும் பாதிக்கிறது, இது உங்கள் செக்ஸ் உணர்வை மேலும் பாதிக்கிறது.

  • ​திடீர் கவலை

ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அதற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏனென்றால் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் கார்டிசோலின் உற்பத்தியில் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, இதற்கு மற்றொரு பெயர் உண்டு. அது ‘ஸ்ட்ரெஸ் ஹார்மோன்’, இது உங்களை எப்போதும் சோகமாகவும் கவலையாகவும் உணர வைக்கும்.

எனவே பெண்கள், ஈஸ்ட்ரோஜன் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் கவனமாக கையாள வேண்டிய நேரம் இது!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment