27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
குற்றம்

வழிமறித்த இராணுவத்தினரை மோதி இழுத்துச் சென்ற கடத்தல் வாகனம்: கில்லாடிகள் ‘எஸ்கேப்’!

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றி சென்ற வாகனத்தினை ஓமந்தை நகர் பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.

இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவவீரர் ஒருவர் வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்துசென்றுள்ளார்.

அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மர

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

UPDATE: கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிததற்கு காரணம் இதுவா?: மனைவியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Pagetamil

கணவன் முறைப்பாடு: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மனைவி கைது!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment