தந்தை-மகன் பலி,பெண் தற்கொலை : படுக்கை, ஒக்சிசன் பற்றாக்குறை ;உச்சத்தில் கொரோனா

Date:

நடிகர் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவதால் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவு மருத்துவமனையில் படுக்கை வசதி, ஒக்சிசன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற நகரங்களில் அதிக அளவு கொரோனாவின் தாக்கம் இருக்கிறது. போதிய அளவுக்கு படுக்கை வசதி இல்லாமல் இருப்பதால் நோயாளிகளை பல கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மும்பை அருகில் உள்ள கல்யாணில் வசித்து வந்த நாகேந்திர மிஸ்ராவும், அவரது மகன் சூரஜ்மிஸ்ராவும் டாக்டர்களாக இருந்தனர். இவர்களுக்கும் நாகேந்திர மிஸ்ரா மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் மூன்று பேரும் வேறு வேறு இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

டாக்டர் நாகேந்திரா தானேயில் உள்ள ஒரு மருத்துவமனையிலும், அவரது மகன் சூரஜ் மும்பை மேற்குபுறநகரில் இருக்கும் கோரேகாவ் மருத்துவமனையிலும், நாகேந்திரா மனைவி மும்பையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வசாய் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஒக்சிசன் அளவு மூவருக்கும் குறைவாக இருந்தது. மிஸ்ராவும் அவரது மகனும் தனித்தனியாக மருத்துவமனை நடத்தி வந்தாலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிசை பலனலிக்காமல் நாகேந்திரா தான்பிறந்த தினத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில் அவரது மகன் சூரஜும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். தந்தையும் மகனும் சிகிச்சை பலனலிக்காமல் அடுத்தடுத்து இறந்திருப்பது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாகேந்திராவின் மனைவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நாகேந்திராவின் மற்றொரு மகனும் டாக்டராக இருக்கிறார். இறந்துபோன இரண்டு பேருக்கும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர்களின் நிலைமை மோசமாகிக்கொண்டேதான் வந்தது. இதில் சூரஜ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புனேயிலும் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புனே வார்ஜி என்ற இடத்தை சேர்ந்த 41 வயது ஷோபா என்ற பெண்ணிற்கு திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்து பார்த்ததில் கொரோனா இருப்பது தெரிய வந்தது. உடனே வெண்டிலேடர் படுக்கை வசதியுள்ள மருத்துவமனையில் சேர்க்கும்படி அம்மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல மருத்துவமனைக்கு சென்றும் மருத்துவமனையில் படுக்கை  இல்லை என்று சொல்லிவிட்டனர். இதனால் ஷோபாவை அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்தார். இரவில் ஷோபா மன அழுத்தம் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒக்சிசன் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் அதற்கு மும்பையில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே ஒக்சிசனை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து வருகிறது. அண்டை மாநிலத்திலும் ஒக்சிசன் கொடுத்து உதவும்படி மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் மும்பை அருகில் உள்ள நாலாசோபாராவில் ஒக்சிசன் பற்றாக்குறையால் 9 நோயாளிகள் சில மணி நேரத்தில் இறந்துபோனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நடிகர் சோனு சூட்டிற்கு கொரோனாதொற்று ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆனால் இப்போது அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று கேத்ரீனா கைஃப், ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்கோத்ரா உட்பட பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது

spot_imgspot_img

More like this
Related

லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன்...

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்