அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு : துனிசியாவில் தொடரும் சோகம்..!!

Date:

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயணங்களின் போது அகதிகள் செல்லும் படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் 40க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பயணத்தை தொடங்கினர்.

சட்டவிரோதமாக மத்திய தரைக்கடலை கடக்கும் மிகவும் ஆபத்தான பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். ஆனால், அகதிகள் பயணித்த படகு மத்திய தரைக்கடலை கடக்கும் போது திடீரென அலையில் சிக்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தால் படகு கடலில் மூழ்கியது. அந்த பயணித்த படகில் இருந்தவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஆனால், கடற்படையினர் வருவதற்குள்ளாக படகில் இருந்த அகதிகள் 41 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் உடல்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் அவற்றை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்