UPDATE: முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு (PHOTOS)

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (15) மாலை இந்த துயரம் இடம்பெற்றது.

நேற்று 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்ப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று மாலை கனமழையும் மின்னல் தாக்கமும் ஏற்ப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்

சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்ணன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே உயிரிழந்தவர்களாவர்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்