புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் வருடாந்தம் மூவாயிரத்துக்கும் அதிகமான விபத்துகள் இடம்பெறுகின்றன. 2018 ஆம் ஆண்டில் வாகன விபத்துக்களின் மூலம் 3,154 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 2019 ஆம் ஆண்டில் 2,852 பேரும் 2020 ஆம் ஆண்டு ஆறு மாத காலத்தினுள் 1242 பேரும் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாளாந்தம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூலம் எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அது தற்போது இத்தொகை 11 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2018ம் ஆண்டு வாகன விபத்துக்களின் மூலம் அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை 9,391 ஆகும். 2019 ஆம் ஆண்டளவில் அது 11 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1