25.1 C
Jaffna
January 29, 2025
Pagetamil
குற்றம்

வவுனியாவில் மறைந்திருந்து மாமியார், மச்சானிற்கு கத்திக்குத்து நடத்திய கிளிநொச்சி இளைஞன் (PHOTO)

வவுனியா கண்டி வீதி, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மருமகன் மேற்கொண்ட தாக்குதலில் மாமியார் மற்றும் மச்சான் மீது கத்திக்குத்து சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (16) பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மரம் ஒன்றுடன் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மச்சானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார். இந்நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் இடுப்பு, முதுகில் குத்தியுள்ளார். இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்ட இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (35), அசோகன் வசந்தி (52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

Leave a Comment