புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திய இருவர் திடீரென உயிரிழந்துள்ளனர். ஒருவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
கலென்பிந்துநுவெவ பிரதேசத்தின் படிகரமுல்ல, ரத்மல்வெட்டிய பகுதியில் நேற்று இரவு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
வீடொன்றில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மூவர் மது அருந்திக் கொண்டிருந்த போது, மூவரும் மயக்கமடைந்தனர்.
அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது, இருவர் உயிரிழந்தனர்.
மயக்கமடைந்த மற்ற நபர் கலென்பிந்துநுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மது விசமடைந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1