Pagetamil
சினிமா

நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு இலேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படுகிறது. அதே நேரம் விவேக்கின் இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே விவேக்கின் உடல்நிலை குறித்து அவரது பிஆர்ஓ நிகில் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “விவேக் நலமாக இருக்கிறார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் நலம் பெற்று செய்தியாளர்களைச் சந்திப்பார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்” என்று கூறினார்.

விவேக் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment