27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

புத்தாண்டின் பின்னரும் சுகாதார நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்!

புத்தாண்டு கொண்டாட்டங்களிற்காக வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் புத்தாண்டுக்கு பிறகும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும்  சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு இன்று முதல் முறையாக மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார்.

புத்தாண்டு தொடர்பான சிறப்பு நிகழ்வுகளின் அமைப்பாளர்கள் பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முன் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் மற்றும் பங்கேற்பாளர்கள் அதை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு நஷ்டஈடு அவசியம் : ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

east tamil

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம் இதுதான்: ஜேவிபியின் கண்டுபிடிப்பு!

Pagetamil

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் – விஜித ஹேரத்

east tamil

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

Leave a Comment