Pagetamil
இந்தியா

2வது கணவன் துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்!

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் ராதா. கடந்த 2002ல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதையத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார் ராதா.

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்த ராதா, தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 2005இல் கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

அப்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள வசந்தராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் வசந்தராஜா, மனைவி, இரு குழந்தைகளூடன் ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட வசந்தராஜா, கடந்த ஒரு வருடமாக சாலிகிராமத்தில் ராதாவுடன் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் பழைய ஆண் நண்பர்களுடன் ராதா தொடர்பில் இருப்பதாக வசந்தராஜா ஆத்திரப்பட, இருவருக்கு இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், கணவர் வசந்தராஜா தன்னை துன்புறுத்துவதாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளி்த்திருக்கிறார் ராதா. புகாரின் பேரில் வசந்தராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வசந்தராஜா திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராதாவுடன் உள்ள பழக்கத்தினால் வடபழனி காவல்நிலையத்திற்கு பணி மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார். தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் பணியில் இருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

துறவறத்துக்கு மாறிய நடிகை

Pagetamil

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Pagetamil

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

Leave a Comment