அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுவரையான காலத்தில் இன்று பதிவான வீழ்ச்சியே மிக மோசமான வீழ்ச்சியாகும்.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 199.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ரூபாவின் வீழ்ச்சியை தடுக்க அரசாங்கம் பல உற்பத்திகளின் இறக்குமதிக்கு தடைவிதித்துள்ள போதிலும், ரூபாவின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1