புத்தாண்டில் சோகம்: வாகனம் மோதி சிறுவன் பலி; சகோதரன் படுகாயம்!

Date:

சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி, கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசியன் (8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவரும் துவிச்சகர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

மூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றுள்ளார். பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சாரதியை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகன தரிப்பிடத்தில் விவாகரத்துக்கு நீதிமன்ற சென்று திரும்பிய கணவன் மனைவி மைத்துனருக்கிடையே சண்டை 3 பேர் கைது

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி  வந்த...

கிளிநொச்சியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல் வல்லுறவு

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல்...

விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்!

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்