புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதியில் காளிகோவிலடியில் திருத்தப்பணிகள் இடம்பெறும் பாலத்தில் விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (14) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழக்க, அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்தார்.
காளிகோவிலடி பாலம் திருத்தப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மக்களின் போக்குவரத்திற்காக மாற்று பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சித்திரைப்புத்தாண்டு தினமான நேற்று இரவு 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வேகமாக சென்ற உந்துருளி திருத்தப்பணிகள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை சமிஞ்சையினை தாண்டி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த திருகோணமலை திரியாய் 06 ஆம் வட்டாரம் கட்டுக்குளத்தினை பிறப்பிடமாகவும், மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டினை வசிப்பிடமாக கொண்ட 03 பிள்ளைகளின் தந்தையான அழகானந்தான் காந்தன் (37) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்