ஐம்பது வயதுக்குக் கீழ் உள்ள ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி மருந்தின் பயன்பாட்டை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கஅமெரிக்க சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்து உள்ளன.
இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா அந்த தடுப்பூசிக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் நால்வரின் சம்பவம் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகத்தை தாமதப்படுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன்
அறிவித்துள்ளது.
இந்த இரத்த உறைவு கிட்டத்தட்ட அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி ஏற்படுத்தியதைப்போல இருப்பதாக அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத் துறை அதிகாரி பீட்டர் மார்க்ஸ் கூறியுள்ளார்.