26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

TVS நிறுவன ரேடியான் மற்றும் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள்கள் விலை உயர்வு!!

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது பயணிகள் மோட்டார் சைக்கிள்களான ரேடியான் மற்றும் ஸ்போர்ட் பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது.

டி.வி.எஸ் ஸ்போர்ட் அதன் இரண்டு வகைகளான கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகியவற்றில் ரூ.30 விலை உயர்வு பெற்றுள்ளது.

இந்த விலை உயர்வை அடுத்து இப்போது அவற்றின் விலை முறையே ரூ.56,130 மற்றும் ரூ.62,980 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், ரேடியனின் விலை அதன் அனைத்து வகைகளிலும் ரூ.1,280 அதிகரித்துள்ளது. ரூ.59,962 ஆக இருந்த ரேடியான் டிரம் மாடலின் விலை இப்போது ரூ.61,242 ஆக உயர்ந்துள்ளது. இதே விலை உயர்வு டிரம் மற்றும் டிஸ்க் விருப்பத்துடன் வரும் சிறப்பு பதிப்பிற்கும் பொருந்தும். இந்த வகைகளின் விலை இப்போது முறையே ரூ.65,567 மற்றும் ரூ.68,567 (அனைத்து விலைகளும், முன்னாள் ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், டி.வி.எஸ் அதன் என்டோர்க் 125, ஜூபிடர் ஆகிய ஸ்கூட்டர்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. அப்பாச்சி பைக்குகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

முன்னதாக, அப்பாச்சி RTR 200 4V இன் ஒற்றை சேனல் ABS பதிப்பு ரூ.1,28,020 ஆக இருந்தது. இப்போது ரூ.1,295 விலை உயர்வுடன், மோட்டார் சைக்கிளின் விலை ரூ.1,29,315 ஆக உயர்ந்துள்ளது. இரட்டை-சேனல் ABS பதிப்பும் கூட அதே போன்று ரூ.1,295 விலை உயர்வைப் பெற்றுள்ளது. முன்னதாக ரூ.1,33,070 விலைக் கொண்டிருந்த இந்த மாடல் இப்போது ரூ.1,34,365 விலையில் கிடைக்கிறது.

இதற்கிடையில், டி.வி.எஸ் அப்பாச்சி RTR 160 4V அதன் டிரம் மற்றும் டிஸ்க் வகைகளுக்கு ரூ.45 விலை உயர்வு பெற்றுள்ளது. இப்போது இந்த பைக் மாடல்களின் விலை முறையே ரூ.1,07,315 மற்றும் ரூ.1,10,365 ஆக உள்ளது. ஆனால், விலைகள் அதிகரித்த போதிலும், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் அப்பாச்சி RTR 160 4V ஆகியவை எந்தவித புதிய மாற்றங்களும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன.

பஜாஜ் பல்சர் NS 200 மற்றும் பஜாஜ் பல்சர் NS 160 ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V இருக்கிறது.

டி.வி.எஸ் ஸ்கூட்டர்களுக்கான விலை ஜூபிடர் ஷீட் மெட்டல் மாறுபாட்டிற்கு ரூ.940 முதல் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் மாடலுக்கு ரூ.2,535 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment