24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
ஆன்மிகம் லைவ் ஸ்டைல்

மிகவும் கவர்ச்சிகரமான உணர்ச்சி மிக்க ராசிக்காரர்களின் ராசி பட்டியல்..

சிலர் வெட்கப்படுபவராகவும், உணர்ச்சி மிக்கவராக இருப்பார்கள். சிலர் தைரியமானவர்களாகவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்பவராக, ஒருவரை ஆழமாக நேசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.சிலரோ உற்சாகத்திற்காக கொடூரமான மன நிலையும் கொண்டிருப்பார்கள்.சிலர் தன்னுடைய ஆழமான காதல், பாசத்தைக் காட்ட சாகச செயல்கள செய்து காட்ட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

​ரிஷபம்

சிலர் சிற்றின்பத்தின் மீது அதிக ஆர்வமும், தீவரமாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளைக் காட்ட தயங்குவதில்லை. காதலிக்கும் போதே ஆழ்ந்த உணர்ச்சி உந்துதலுக்கு ஆளாகிறார்கள். சிற்றின்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த சிலர் தாங்கள் காதலிக்கும் போது, தான் காதலிக்கக்கூடியவர் மீது மிகுந்த பாசமும், அன்பையும் காட்டுபவராக இருப்பார்கள். அதே சமயம் இவர்கள் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாத சில மோசமான செயல்களையும் செய்ய நினைப்பார்கள்.

​கன்னி

இந்த பட்டியலில் கன்னி ராசியினர் இருப்பது ஆச்சரியமாகத் தோன்றலாம். இவர்கள் மற்றவர்கள் மீது அன்பையும், காதலையும் வாரிக்கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை காதலிக்கத் தொடங்கிவிட்டால் அவர்களை ஒருபோதும் விட்டு பிரியாதவர்களாக இருப்பார்கள். அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிய பிரச்சினையாக இருந்தாலும் மனம் உடைந்து விடக்கூடியவர்கள் என பொதுவாக உணர்ச்சிகரமான நபராக இருப்பார்கள்.

​விருச்சிகம்

விருச்சிக ராசியினர் பெரும்பாலும் உணர்ச்சிகரமான நபர்களாக இருப்பார்கள். இவர்கள் காதலில் விழுந்து விட்டால் மிகுந்த கவனத்துடனும், ரொமாண்டிக் மூடுடன் இருப்பார்கள். இவர் தன்னுடைய காதலை வெளிப்படுத்த எதற்காகவும் பயப்பட மாட்டார்கள். அதோடு தன்னுடைய அன்பு எவ்வளவு ஆழமானது என்பதை உணர்த்தக்கூடிய இவர்கள், சிற்றின்பத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

காதல் எவ்வளவு இருக்கோ அதே அளவு கோபமும் அதிகம் வரக்கூடும். அதே போல் மறக்கவும், மன்னிக்கவும் அதிக காலம் எடுத்துக் கொள்ளும் நபராக இருப்பார்கள்.

​தனுசு

தனுசு ராசியினர் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாகவும், எப்போதும் பொருளாதார ரீதியாக சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தை துணி அல்லது வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை விட, சுற்றுலா பயணங்கள் செய்வதற்கு மிகவும் செலவழிப்பார்கள்.

அதே போல இவர்கள் புதிய அனுபவத்தைப் பெறவும், சாகாச பயணங்கள், சாகச செயல்களில் பங்கேற்க விரும்புவார்கள்.

புதிய விஷயங்களை முயன்று காதல் செய்ய விரும்புவார்கள். அதே சமயம் தான் காதலிப்பவரை மகிழ்விக்க எந்த ஒரு ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடவும் தயங்க மாட்டார்கள். இவர்களின் கனவில் கண்டு களிக்க ஆசைப்படும் இடத்தை நேரில் பார்க்க எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவார்கள். இவர்களிடம் காமம் மேலோங்கி இருக்கும்.

​மீனம் ராசி

மீன ராசியினர் எப்போதும் அவர்களை அவர்களே அதிகமாக கவனித்துக் கொள்ளக்கூடிய, பராமரித்துக் கொள்ளக்கூடிய நபர்களாக இருப்பார்கள். அதற்கேற்றார் போன்ற பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

இவர்கள் குடும்பத்தின் பண செலவில் பெரும்பாலும் இவர்களுக்காக தான் இருக்கும் எனலாம். அதிகமாக செலவிட்டு பின்னர் வருத்தப்படக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் பண விஷயத்தில் கவனமாகவும், தேவையற்ற பொருட்களை வாங்குதலையும், செலவையும் தவிர்த்தாலே மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment