புதுவருட தினத்தில் வவுனியாவில் 5 பேர் கைது!

Date:

வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் புதுவருட தினத்தன்று மது போதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப்பகுதிகளில் புதுவருட தினத்தன்று விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல், மற்றும் வீதி ஒழுங்குகளை பேணாமல் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்