போலி விசாவைப் பயன்படுத்தி, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக கனடா செல்ல முயன்ற இளைஞன் ஒருவர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு, ஆரையம்பதியை சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரே கைதானார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய் புறப்படவிருந்த EK-649 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக இன்று அதிகாலை 3.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அவர் சமர்ப்பித்த கனடா விசாவில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அங்கு தொழில்நுட்ப பரிசோதனையின் போது கனடிய விசா மோசடியானது என கண்டறியப்பட்டது. ஒன்று என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலி விசாவை தயாரிக்க முகவர் ஒருவரிற்கு தனது தாயார் பணம் செலுத்தியதாக வாக்குமூலமளித்தார்.
அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.