30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஹிட்லர் பாணி ஆட்சியை விரும்புபவர்களிற்கு மக்கள் விரைவில் பதிலளிப்பர்!

ஹிட்லர் பாணியிலான ஆட்சியை நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று யாராவது சொன்னால், மக்கள் விரைவில் அவர்களுக்கு பதிலளிப்பார்கள் என்று பொதுஜன பெரமுனவை தீவிரமாக ஆதரித்து வந்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நாரஹேன்பிட், அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஹிட்லர் பாணி ஆட்சி நடத்தாமையே அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்திக்கு காரணமென தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு பரவலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

“கோட்டபய ஒரு ஹிட்லராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. கோட்டாபய ஹிட்டலரை போல செயற்பட வேண்டுமென சொல்ல, இத்தகைய அமைச்சர்களுக்கு என்ன கருத்து இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. யாரிடமாவது மதிப்பெண்ணை பெற விரும்புகிறார்களா, அல்லது நாட்டை அழிக்க விரும்புகிறார்களா என்பது தெரியவில்லை.

உண்மையில் இதை கண்டிக்க வேண்டும். இது தம்மத்தை அடிப்படையாக கொண்ட நாடு. அன்பை அடிப்படையாக கொண்டது.

எங்களால்தான் 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன என யாரும் பெருமை கொள்ள முடியாது.

அதே நேரத்தில் 69 லட்சம் வாக்குகள் பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நம்பகத்தன்மையே காரணம் என்று அச்சமின்றி கூறலாம். ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளின் எண்ணிக்கை ஐந்து லட்சம் அதிகரித்தது. ஆனால் இன்று அந்த ஐந்து லட்சம் முற்றிலுமாக இழந்துள்ளது.

ஹிட்லரை போன்ற ஆட்சிக்கே 69 இலட்சம் பேர் வாக்களித்தார்கள் என, யாராவது இதைச் சொன்னால், ஹிட்லரைப் போன்ற ஒரு ஆட்சிக்கு எங்கள் மக்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்று சிலர் எங்களிடம் வந்து திரு மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிறகு நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதையே கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறார்கள்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

Leave a Comment