ஆப்கானிலிருந்து நேட்டோ படைகளும் வெளியேறுகிறது!

Date:

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் நேட்டோ படைகளும் திரும்பப்பெறப்படவுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க படையினர் 2,500 பேரும், நோட்டோ படையினர் சுமார் 7,000 பேரும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர்.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலிபான்கள்-ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற ட்ரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன் நிர்வாகம், அமெரிக்க படைகளை மே 1ஆம் திகதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவித்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் படையினர் முழுவதையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து 36 நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் வீரர்களை திரும்பப்பெறுவதாக நேற்று அறிவித்தது.

நேட்டோ அமைப்பை சேர்ந்த சுமார் 7000 வீரர்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர். அவர்கள் அமெரிக்க படையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கா தனது படைகளை திரும்பப்பெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மே 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அவர்களுடன் இணைந்து படைகளை வெளியேற்றுவது தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் தலைமையில் பெல்ஜியத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லொய்ட் ஆஸ்டினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மே 1ஆம் திகதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது. 7000 வீரர்களையும் திரும்பப்பெறும் நடைமுறை சில மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்