மாகாணசபையை இரண்டரை வருடத்தில் சீரழித்த விக்னேஸ்வரன், தனக்கு என்ன தகுதியிருக்கிறது என நினைத்துக் கொண்டு, மாவை சேனாதிராசாவிற்கு தகுதியில்லையென விமர்சித்துள்ளார் என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் வடமாகாணபையின் அவைதலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம்.
முதலமைச்சர் வேட்பாளரிற்கு மாவை பொருத்தமற்றவர் என அண்மையில் க.வி.விக்னேஸ்ரன் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானத்தை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது,
மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளரிற்கு தகுதியற்றவர் என கூறுவதே முதலில் நாகரீகமற்றது.
கடந்த முறை முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டமைக்கு காரணம், மாவை சேனாதிராசா தகுதியற்றவர் என்பதால் அல்ல.
அப்படியொரு கருத்தை கட்சிக்குள் சம்பந்தன் ஒருபோதும் சொன்னதுமில்லை. முதலமைச்சர் வேட்பாளராக மாவையின் பெயரை உச்சரித்தவன் நான். எங்களிடம் சம்பந்தன் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை.
விக்னேஸ்வரனை ஏன் கொண்டு வந்தேன் என்பது சம்பந்தனிற்குத்தான் தெரியும். ஆனால், மாவை தகுதியற்றவர் என்பதால் விக்னேஸ்வரன் கொண்டு வரப்படவில்லை.
அப்படி கொண்டு வரப்பட்டு மாகாணசபையை இரண்டரை வருடத்தில் சீரழித்தவர் விக்னேஸ்வரன். அவர் தனக்கு என்ன தகுதியிருக்கிறது என, இன்னொரு கட்சியின் தலைவரை, வேட்பாளரை தகுதியற்றவர் என விமர்சிக்க முடியும்? என சூடாக கேள்வியெழுப்பினார்.