26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
சினிமா

கொரோனா தொற்றுடன் தியேட்டருக்கு போனேனா?: நிவேதா விளக்கம்!

பிங்க் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படம் கடந்த 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. பவர் ஸ்டார் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள அந்த படத்திற்கு அக்கட தேசத்து ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்று வக்கீல் சாப் படத்தை பார்த்திருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிவேதா சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அதை பார்த்தவர்களோ, உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று 3ம் திகதி தான் சொன்னீர்கள். கொரோனாவுடன் இப்படி தியேட்டுக்கு வரலாமா?. நெகட்டிவ் என்று வந்திருந்தாலும் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டுமே என்றார்கள். சிலரோ ஒருபடி மேலே போய், தெலங்கானா போலீசாரிடம் நிவேதா மீது புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து நிவேதா தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. அதன் பிறகே நான் தியேட்டருக்கு சென்றேன். கொரோனாவுடன் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் உயிருடன் விளையாடும் அளவுக்கு நான் பொறுப்பில்லாதவள் இல்லை என்றார்.

தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நிவேதா, நெகட்டிவ் என்று வந்ததை சொல்லாததால் தான் இத்தனை குழப்பமும்.

இதற்கிடையே பவன் கல்யாணின் பாதுகாவலர், ஜன சேனா கட்சியின் நிர்வாகிகள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் பவன் கல்யாண்.

கட்சி வேலையில் பிசியாக இருந்த பவன் கல்யாண் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் வக்கீல் சாப். இந்நிலையில் வக்கீல் சாப் படத்தை பார்க்கும் அனைவரும் நிவேதா தாமஸின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரின் புகைப்படத்துடன் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment