போதைப்பொருளுடன் கைதான இளைஞர்களை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Date:

போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற 17 வயது இளைஞர்கள் இருவரை மடக்கிய பொலிசார், அவர்களிடம் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸின், நைஸ் (Alpes-Maritimes) என்ற இடத்தில் கடந்த ஞாயிறு மாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடமையிலிருந்த பொலிசாரை கண்டதும், இளைஞர்கள் அங்கிருந்து விரைவாக நழுவிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து உசாரடைந்த பொலிசார், அவர்களை பிடித்து சோதனையிட்டனர்.

ஒரு இளைஞன் கையிலிருந்த பொதியை தரையில் வீசினான். அதில் யூரோக்கள், கொக்கெயின், கஞ்சா என்பன விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டன.

மற்றைய இளைஞனும் பொதியொன்றை வீசினான். அதை சோதனையிட்ட பொலிசார் அதற்குள் மலைப்பாம்பு ஒன்றை மீட்டனர்.

தனது நண்பருக்கு சொந்தமானது என அவர் கூறினாலும், மலைப்பாம்பின் பெயரையும் அவர் அறிந்திருக்கவில்லை.

இருவரும் பொலிசாால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்